போராட்டத்தை அடுத்து வழமைக்குத் திரும்பியது கனடா தபால் சேவைகள்

பணிப் புறக்கணிப்பு போராட்டங்களை முன்னெடுத்து வந்த கனடா தபால் சேவைகள் வழமைக்குத் திரும்பியுள்ளன.

கடந்த மாதத்தின் நடுப்பகுதியல் இருந்து சுழற்சி முறையிலான பணிப் புறக்கணிப்பு போராட்டங்களை கனடா தபால் சேவை பணியாளர்கள் முன்னெடுத்துவந்த நிலையில், அதன் சேவைகள் தடைப்பட்டுப் போனமை குறிப்பிடத்தக்கது.

எனினும் மத்திய அரசு கொண்டுவந்த சட்டத்தின் மூலம் அவர்கள் அனைவரும் பணிகளுக்கு திரும்ப நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளர்.

இந்த நிலையில் கடந்த மாதம் 13ஆம் நாளில் இருந்து சேவைத் தடங்கல்கள் ஏற்பட்டு வந்த நிலையில், தற்போது நிலைமை சீரடைந்து விட்டதாக கனடா போஸ்ட் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை வன்கூவரில் மட்டும் சிறிது தடங்கல்கள் காணப்படுவதாகவும் அவர்கள் நேற்றுக் கூறியுள்ளனர்.

தடைப்பட்டு போயிருந்த சேவைகள் அனைத்தும் நாடு முழுவதும் தற்போது மீளவும் தொடங்கியுள்ளதாகவும், பண்டிகைக் காலத்திற்கான வினியோகங்கள் அனைத்தும் வழக்கம் போல இடம்பெறும் என்றும் கனடா தபால் சேவைகள் தெரிவித்துள்ளது.

நத்தார் பெருநாளுக்கு இன்னமு்ம சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில் அது இவ்வாறு அறிவித்துள்ளது.