துப்பாக்கி வன்முறைக்கு எதிரான நடவடிக்கைக்கு 7 மில்லியன்களை அறிவித்தது மத்திய அரசு!

ரொறன்ரோவில் துப்பாக்கி மற்றும் குழு வன்முறைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க, மத்திய அரசாங்கம் பொலிஸாருக்கு 7 மில்லியன் டொலர்களை அறிவித்துள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை எல்லை பாதுகாப்பு மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் குறைப்பு அமைச்சர் பில் பிளேர் நேற்று (வியாழக்கிழமை) அறிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக பல துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் அவற்றை குறைக்கவே இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதவேளை இது குறித்து கருத்து தெரிவித்த மேஜர் ஜோன் டோரி, மொத்தமாக 30 மில்லியன் டொலர்கள் என்ற ஒட்டாவா அரசின் கோரிக்கைகளில் தொடர்ச்சியாக இந்த அறிவிப்பு முதன் முதலாக அறிவிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.