ஜெனரல் மோட்டர்ஸ் தொழிற்சாலையை மீண்டும் திறக்க ஒஷ்வா சட்டசபை கருத்திற்கொள்ள வேண்டும் – யூனிஃபர்

ஜெனரல் மோட்டர்ஸ் தொழிற்சாலை திறந்து வைக்க தொழிற்சங்கம் முன்வைக்கும் விருப்பங்களை ஒஷ்வா சட்டசபை கருத்திற்கொண்டு ஜனவரி 7 ம் திகதி பதிலளிக்க வேண்டும் என யூனிஃபர் தலைவர் ஜெர்ரி டயஸ் தெரிவித்துள்ளார்.

அதன் பிரகாரம் நேற்று (வியாழக்கிழமை) ஜெர்ரி டயஸ் ஜெனரல் மோட்டார்ஸ் அதிகாரிகளை சந்தித்தார்.

இதன் போது ஜெனரல் மோட்டர்ஸ் தொழிற்சாலை திறந்து வைக்க வேண்டும் எனக் கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இருப்பினும் குறித்த சந்திப்பானது தனக்கு வெறுப்பாக இருந்தது என சந்திப்பின் பின்னர் இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியிருந்தார்.

கடந்த மாதம் ஜெனரல் மோட்டர்ஸ் வாகன உற்பத்தித் தொழிற்சாலை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து சுமார் 3,000 பேர் வேலையை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.