பயங்கரவாத குற்றச்சாட்டு: கனேடியருக்கு 40 ஆண்டு சிறை

அமெரிக்காவில் பயங்கரவாத குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட கனேடியருக்கு 40 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


நியூயோர்க்கிலுள்ள டைம்ஸ் சதுக்கம் மற்றும் நகரின் சுரங்கப்பாதை ஆகிய இடங்களில் தாக்குதலுக்கு திட்டமிட்ட குற்றச்சாட்டில் அவருக்கு நேற்று (புதன்கிழமை) சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட வேண்டும் என அமெரிக்க வழக்கறிஞர்கள் கோரியிருந்த போதிலும் பின்னர் 40 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஐ.எஸ். செயற்பாட்டாளர்களுடன் இணைந்து பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு சதித்திட்டம் தீட்டியதாக ஒன்ராறியோவை சேர்ந்த 20 வயதுடைய நபர் மீது கடந்த 2016ஆம் ஆண்டு குற்றம் சாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.