அல்கஹோல் அதிகம் உள்ள மதுபானங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை – சுகாதார அமைச்சு

அல்கஹோல் அதிகம் உள்ள மதுபானங்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் கனடா சுகாதார அமைச்சு ஈடுபட்டுள்ளது. அண்மையில் கியூபெக் மாகாணத்தில் இரண்டு இளைஞர்கள் இறந்ததை அடுத்தே குறித்த முடிவுக்கு வந்துள்ளதாக தெரியவருகின்றது.

அத்தோடு குறித்த பானங்கள் மூலம் செய்யப்பட்ட ஆராய்ச்சியின்படி இது பொதுமக்களின் சுகாதாரத்திற்கு பங்கம் ஏற்படுத்தும் என்றும், குறிப்பாக இளைஞர்கள் உயிரிழக்க காரணமாக அமைந்தது எனவும் மத்திய சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில் புதிதாக முன்மொழியப்பட்ட விதிகள் கீழ், 568 மில்லிலீற்றர் பானத்தில் 4.5 சதவீதமான அல்கஹோல் அளவு இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் 568 மில்லிலீற்றரில் 11.9 சதவீதமான அல்கஹோல் அளவு இருந்ததுடன், குறித்த இளைஞனின் மரணத்தின் பின்னர் அந்நிறுவனம் அதன் உற்பத்தியை நிறுத்திக்கொண்டது.

இந்நிலையில் உணவு மற்றும் மருந்து ஒழுங்குமுறை அமைச்சகத்தால் முன்மொழியப்பட்ட குறித்த திருத்தங்கள் சனிக்கிழமையன்று கனடா வர்த்தமானியில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர் எதிர்வரும் 2019 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைக்கு வருமென்றும் கனடா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.