ரொறன்ரோ பகுதியில் 24 மணி நேரத்தில் 6 துப்பாக்கிச் சூடு – இருவர் உயிரிழப்பு!

ரொறன்ரோ பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 6 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்ருள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ரொறன்ரோ பொலிஸாரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் 20 மற்றும் 30 வயதுடையவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர்கள் சிகிச்சை பலனின்றி வைத்தியசாலையில் உயிரிழந்தனர்.

மேலும் 15 மணித்தியாலங்களில் மட்டுமே 4 துப்பாக்கிச் சூட்டு இடம்பெற்றிருந்ததாகவும் பொலிஸாரின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.