அமைச்சின் அறிவிப்பால் 95 பேரின் பகுதி நேர வேலைவாய்ப்புக்கள் நிறுத்தப்படுகின்றது – கத்தோலிக்க பள்ளி சபை

நிதி குறைப்பு காரணமாக 95 பேரின் பகுதி நேர வேலைவாய்ப்புக்கள் நிறுத்தப்படுவதாக ரொறன்ரோ கத்தோலிக்க பள்ளி சபை தெரிவித்துள்ளது.


மாணவர்கள் கூடுதல் திறன்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட திட்டங்களைக் குறைப்பதற்கான மாகாணத்தின் முடிவு காரணமாகவே இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது என அச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

இந்த வேலை இழப்பானது 35 பகுதி நேர மாணவர் வகுப்புகள் மற்றும் இளைஞர்களுக்கு 60 மணி நேர மேலதிக நிகழ்ச்சிகள் என்பனவற்றில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை, ஒன்ராறியோ அரசாங்கம் ஆரம்ப பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் சிறப்பு திட்டங்களுக்கான நிதியில் 25 மில்லியன் டொலரை குறைக்கும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

இதனை சமர்ப்பித்து உரையாற்றிய கல்வி அமைச்சர் லிசா தொம்சன், “பள்ளி நிர்வாகக் குழுவில் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவான திட்டங்கள், “வீணான’ செலவினங்களை நீண்ட காலமாக பதிவு செய்திருக்கிறது” என கூறிஇருந்தமை குறிப்பிடத்தக்கது.