Scarborough, Malvern பகுதியில் துப்பாக்கிச் சூடு

Malvern பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஆண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Finch Avenue மற்றும் Tapscott வீதிப் பகுதியில், Crittenden Squareஇல் இன்று அதிகாலை 1.30 (Dec 18, 2018) அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதை அடுத்து, அங்கு காவல்துறையினர் விரைந்தனர்.

சம்வம் தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள அவர்கள், தகவல் அறிந்து தாம் சம்பவ இடத்தினைச் சென்றடைந்த போது அங்கே 20 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் குறைந்தது ஒரு துப்பர்ககிச் சூட்டுக்காயத்துடன் காணப்பட்டதாகக் கூறியுள்ளனர்.

இதேவேளை காயமடைந்த அந்த நபர் உடனடியாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதுடன், அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற காவல்துறையினர், குறித்த அந்த பகுதியில் குறைந்தது ஆறு துப்பாகிப் பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.