கனேடிய பிரஜைக்கு அவுஸ்ரேலியாவில் கடூழிய சிறைத்தண்டனை!

சர்வதேச ரீதியில் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில், கனேடிய பிரஜையொருவருக்கு அவுஸ்ரேலியாவில் 8 வருடங்களும் 5 மாதங்களும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் கியுபெக் மாகாணத்தைச் சேர்ந்த அன்ரே தமின் (வயது-65) என்பவர் கடந்த 2016ஆம் ஆண்டு இரண்டு இளம்பெண்களின் துணையுடன் அவுஸ்ரேலியாவுக்கு கப்பல் மூலம் கொக்கெயின் போதைப்பொருள் கடத்தியுள்ளார்.

சுமார் 100 கிலோகிராம் கொக்கெயின் இவ்வாறு கடத்தப்பட்டதோடு, அவை சுமார் 60 மில்லியன் டொலர்கள் என கணிப்பிடப்பட்டுள்ளன.

கடந்த இரண்டு வருடங்களாக இதுகுறித்த விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில், நேற்று அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும், கடத்தலில் முக்கிய பங்கு வகித்த கியுபெக்கைச் சேர்ந்த இரு பெண்களில் ஒருவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் ஏழு வருட சிறைத்தண்டனையும் மற்றொரு பெண்ணுக்கு 8 வருட சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.

இவர்கள் அனைவரும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் இணைந்து செயற்பட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.