ஒன்றாரியோ பாடசாலைகளின் விசேட நிகழ்வுகளுக்கான நிதியொதுக்கீடு நிறுத்தம்!

ஒன்றாரியோவிலுள்ள ஆரம்ப மற்றும் உயர்நிலை பாடசாலைககளில் முன்னெடுக்கப்படும் விசேட நிகழ்ச்சித்திட்டங்களுக்கான நிதியை அந்த மாநில அரசாங்கம் நிறுத்தியுள்ளது. 25 மில்லியன் டொலர் நிதி இவ்வாறு நிறுத்தப்பட்டுள்ளது.


குறித்த நிதி விரயமாக்கப்படுவதாகவும், மிதமிஞ்சிய செலவீனம் என்றும் ஒன்றாரியோ அரசாங்கம் குறிப்பிடுகிறது.

எனினும், இச்செயற்பாடு மாணவர்களின் உளவியல் ரீதியான செயற்பாடுகளை பாதிக்கும் என்றும், மேலதிக வகுப்புக்களை நடத்த முடியாமல் போகுமென்றும், தலைமைத்துவ செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாதென்றும் ஒன்றாரியோ அரச பாடசாலைகள் சபை தெரிவித்துள்ளது.

ஆனால், பாடசாலை முடிந்த பின்னர் மேற்கொள்ளப்படடும் விசேட நிகழ்ச்சித்திட்டங்கள், இளைஞர்களை பல தீய வழிகளுக்கும் இட்டுச்சென்றுள்ளதென ஒன்றாரியோ அரசாங்கம் கூறுகின்றது.