மின்சக்தி தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டத்தின் எதிரொலி – அவசரமாக கூடுகின்றது சட்டமன்றம்!

மின்சக்தி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ள நிலையில், அவர்களது போராட்டத்தை தடுக்க ஒன்ராறியோ சட்டமன்றம் நாளை (திங்கட்கிழமை) கூடவுள்ளது.

மின் உற்பத்தி தொழிலாளர்கள் 6000 பேர் வரை அடுத்த வாரம் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

அந்தவகையில் எதிர்வரும் வாரங்களில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் இடம்பெறவுள்ள நிலையில், அவர்களது போராட்டத்தால் குறித்த கொண்டாட்டங்களில் பாதிப்பு ஏற்படுமென தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையிலேயே மின்சக்தி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில், குறித்த கூட்டத்தொடரை அவசரமாக நடத்த தீர்மானித்துள்ளது.

அதேவேளை தொழிற்சங்கத்தின் கோரிக்கைக்கு உடனடியாக பதிலளிக்கவில்லை என்றால் போராட்டம் 21 நாட்களுக்கு நீடிக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.