சீனாவில் கைதாகியுள்ள கனடாவின் முன்னாள் இராஜதந்திரியை சந்தித்தார் கனேடிய தூதுவர்!

சீனாவில் கைது செய்யப்பட்டுள்ள கனடாவின் முன்னாள் இராஜதந்திரியான மைக்கல் கோவ்றிங்கை சீனாவுக்காகன கனேடிய தூதுவர் ஜோன் மக்கலம் சந்தித்துள்ளார்.

அண்மைய நாட்களில் இரண்டு கனேடியர்கள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்தார்கள் என குற்றம் சாட்டி சீனாவின் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் ஒருவரான கனடாவின் முன்னாள் இராஜதந்திரியான மைக்கல் கோவ்றிங்கை சந்திப்பதற்கு சீன அதிகாரிகள் அனுமதி வழங்கிய நிலையில் சீனாவுக்காகன கனேடிய தூதுவர் ஜோன் மக்கலம் வெள்ளிக்கிழமை பீஜிங்கில் சந்தித்துள்ளார்.

கனேடிய வெளியுறவுச் செயலகம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், அந்தரங்க பாதுகாப்பு காரணமாக இது குறித்த மேலதிக விபரங்கள் எதனையும் வெளியுறவுத் திணைக்களம் வெளியிடவிலலை.

இதேவேளை சீனாவில் கைது செய்யப்பட்டுள்ள மற்றொரு கனேடியராக தொழிலமுனைவர் மைக்கல் ஸ்பாவோரைச் சந்திப்பதற்காக, கனேடிய அதிகாரிகள் தொடர்ந்தும் சினாவுடன் பேச்சுக்களை நடாத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள பிரதமர் ஜஸ்டின் ரூடோ, தடுத்து வைக்கப்பட்டுள்ளோரை தூதரக அதிகாரிகள் சந்திப்பதற்கான அனுமதி சீன அரசாங்கத்திடம் கோரடப்படட நிலையில், ஒருவரைச் சந்திப்பதற்கான அனுமதி ஏற்கனவே கிடைத்துவிட்டது எனவம், மற்றையவரையும் சந்திப்பதற்கான அனுமதி விரைவில் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.