பாடசாலை சிற்றுண்டிசாலை பட்டியலிலிருந்து பன்றி இறைச்சியை நீக்க கனடா மேயர் மறுப்பு!

மொண்ட்ரியல் புறநகர்ப் பகுதியில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் பன்றி இறைச்சி உணவை தவிர்ப்பதற்கு முஸ்லிம் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


எனினும், மொண்ட்ரியலுக்கு புறநகர் பகுதியான டோவல் நகர முதல்வர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். அதற்கான காரணத்தை நகர லிகிதர் அனைத்து பெற்றோருக்கும் எழுத்து மூலமாக அறிவித்துள்ளார். அவர் வௌியிட்டுள்ள அறிக்கையில் “கனடா மற்றும் கியூபெக்கிற்கு ஏற்றவாறு முஸ்லிம்கள் தங்களை மாற்றிக் கொள்வது அவசியம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

அவர்கள் அங்கு குடியேறுவதற்கு விரும்பியதன் காரணமாக அதன் பழக்கவழக்கங்கள், பாரம்பரியங்கள், வாழ்க்கை முறை என்பவற்றையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்”.  “அத்துடன் அவர்கள் கியூபெக்கில் வாழ்வதாயின் ஏனைய மக்களுடன் தம்மை ஒருங்கிணைக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்”

“அவர்கள் தங்களுடைய வாழ்க்கை முறையை மாற்றியமைப்பதென அவர்கள் ஒரு புரிந்துணர்வு வர வேண்டும், கனேடியர்கள் அவர்களை தாராளமாக வரவேற்கிறார்கள்.

கனேடியர்கள் இனவாதிகளோ அல்லது வௌிநாட்டவருக்கு விரோதமானவர்களோ அல்ல, அதேவேளை, முஸ்லிம்களுக்கு முன்னதாக பல இனத்தவர்களை அவர்கள் குடியேற்றவாசிகளாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.

ஆனால் நிலைமாறான உண்மை என்னவென்றால், முஸ்லிம் நாடுகளில் முஸ்லிம் அல்லாத குடியேற்றவாசிகளை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.”

“”மற்ற நாடுகளை விட, கனேடியர்கள் தங்கள் அடையாளத்தை விட்டுக்கொடுக்க விரும்பவில்லை, அது அவர்களின் கலாசாரம்”

கனடா வரவேற்கும் ஒரு நாடாக இருந்தால், அயல்நாட்டு மக்களை வரவேற்பது டொர்வலின் மேயர் மாத்திரம் அல்ல, கனடா மற்றும் கியூபெக்கின் ஒட்டுமொத்த மக்களும் இதில் உள்ளடங்குகின்றனர்.

“கடைசியாக, கனடாவில் (கியூபெக்) அதன் யூதேய-கிறிஸ்தவ வேர்கள், கிறிஸ்துமஸ் மரங்கள், தேவாலயங்கள் மற்றும் மத திருவிழாக்கள் ஆகியவற்றோடு, மதத்தில் தனிப்பட்ட ராச்சியமாக இருக்க வேண்டும் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.