நான்கு புதிய செனட்டர்களை நியமித்தார் பிரதமர்!

மேல் சபையில் காணப்படும் வெற்றிடத்தை நிரப்பும் வகையில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நான்கு புதிய செனட்டர்களை நியமித்துள்ளார்.


அந்தவகையில் எட்டு ஆண்டுகளில் வெற்றிடமாக இருந்த செனட் முதன் முறையாக முழுமையாக 105 செனட்டர்களால் நிரப்பப்பட்டிருக்கிறது.

பிரதமராக பதவியேற்றதன் பின்னர் ஜஸ்டின் ட்ரூடோ 49 செனட்டர்களையும் நியமித்துள்ளார். அத்தோடு 2019 ஆம் ஆண்டில் இன்னும் கூடுதலான நியமனங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் அடுத்த ஆண்டு கொன்சர்வேற்றிவ் கட்சியின் 5 உறுப்பினர்கள் கட்டாய ஓய்வினை பெறவுள்ளனர். குறிப்பாக அடுத்த ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள கூட்டாட்சி தேர்தலுக்கு முன்னர் மூன்று பேர் ஓய்வுபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.