வாகனம் ஒன்றில் சுடப்பட்ட நிலையில் ஆண் மீட்பு – ஸ்கார்பாரோவில் சம்பவம்

ஸ்கார்பாரோவில் வாகனம் ஒன்றில் சுடப்பட்ட நிலையில் ஆண் ஒருவரை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


மான்சிங்சிட் அவென்யூ அருகே Ellesmere Road இல் நேற்று (திங்கட்கிழமை) நள்ளிரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கார் ஒன்றில் இருந்த ஆண் மற்றும் பெண் இருவரும் இருந்த போது வேறு காரில் இருந்து வந்த நபர் 10 ற்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார். இதன் போது குறித்த இருவரும் சென்ற வாகனம் ரயில் வழிகாட்டியில் சென்று மோதி விபத்துக்குள்ளானது.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் படுகாயமுற்ற ஆண் நபரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர். இருப்பினும் அவருக்கு உயிராபத்து இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாகனத்தை செலுத்திய பெண்ற்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.