ஒன்ராறியோவின் நிதி பற்றாக்குறை இந்த ஆண்டு $12.3 க்கு உயரும் – நிதி கண்காணிப்பகம்

நிதி பற்றாக்குறையானது இந்த நிதியாண்டில் 12.3 பில்லியன் டொலராக உயரும் என ஒன்ராறியோவின் நிதி கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இவை அனைத்தும் வசந்த காலத்திற்கு முன்னர் கணித்ததை விட அரை பில்லியன் டொலர்கள் அதிகமாகும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வர்த்தக திட்டம் மற்றும் பல வரி அதிகரிப்புகள் பலவீனமான கூட்டு பொருளாதார உடன்படிக்கைகள் இரத்து செய்யப்பட்டமை போன்ற விடயங்களே இதில் தாக்கத்தை செலுத்தியுள்ளதாக நிதி பொறுப்பு அதிகாரி பீட்டர் வெல்ட்மேன் தெரிவித்துள்ளார்.

இத்தகைய கொள்கை மாற்றங்கள் இன்றி 2022-23 க்குள் நாட்டில் பற்றாக்குறை 16 பில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வெல்ட்மேன் கூறினார்.

மாகாண தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில், மாகாண பற்றாக்குறை 2018 ஆம் ஆண்டில் 11.8 டொலர் பில்லியனாக உயரும் என்றும் பின்னர் அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்தில் அதிக செலவினங்கள் உள்ளடக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இந்த நிதியாண்டில் நிதி பற்றாக்குறையானது 12.3 பில்லியன் டொலராக அதிகரிக்கவுள்ளதாக வெல்ட்மேன் கூறினார்.

இந்நிலையில் 6.7 பில்லியன் டொலர் பற்றாக்குறையை மத்திய அரசாங்கம் பூர்த்தி செய்துள்ளதாகவும், இந்நடவடிக்கையானது ஒன்ராறியோவின் கணக்காய்வாளர் நாயகத்தை கேள்விக்கு உட்படுத்தும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.