ஒட்டாவாவின் புதிய வரி சுமை – ஆய்வு செய்ய வேண்டும் என ஒன்ராறியோ, சாஸ்கட்சுவான் அரசு கோரிக்கை!

கனடியர்கள் மீது புதிய வரி சுமைகளை சுமத்தும் முன் புதிய வரி நடவடிக்கைகளை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என ஒன்ராறியோ மற்றும் சாஸ்கட்சுவான் கோரிக்கை விடுத்துள்ளது.


அதன் பிரகாரம் ஒட்டாவா மற்றும் மற்றய மாகாணங்களிலிருந்து வரும் நிதி அமைச்சர்கள் இன்றிரவு மற்றும் நாளை ஒட்டாவாவில் சந்திக்கவுள்ளனர். குறித்த சந்திப்பின் போதே புதிய வரி சுமைகள் தொடர்பில் பேசவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு கார்பன் வரி, எண்ணெய் மற்றும் எரிவாயு தொழிற்துறையினர் போராட்டங்கள் – பூகோள பொருளாதாரத்தின் நிலையில் கனடிய போட்டித்தன்மை பற்றியும் கலந்துரையாடப்படவுள்ளது.

மேலும் இதன் போது ஒன்ராறியோவின் நிதி அமைச்சர்விக் ஃபெடெலி மற்றும் சஸ்காச்சுவான் நிதி அமைச்சர் டோனா ஹார்பேர் ஆகியோர் ஜனவரி மாதம் முதல் ஒரு தேசிய கார்பன் விலை மற்றும் விரிவாக்கப்பட்ட கனடா ஓய்வூதிய திட்டத்தை திணிக்கும் ஒட்டாவாவின் திட்டத்தில் உள்ள பொருளாதார தாக்கங்கள் பற்றி கலந்துரையாட முடிவு செய்துள்ளனர்.