ரொறன்ரோவில் 14 வயது சிறுவன் கொலை!

ரொறன்ரோவின் Meadow Park பகுதியில் 14-வயது சிறுவன் ஒருவன் கொலை செய்யப்பட்டுள்ளமை தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


Mississauga-வின் Meadow Park பகுதியில் இன்று(சனிக்கிழமை) குறித்த சிறுவன் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் பீல் பிராந்திய பொலிஸார் தீவிர விசாரணை முன்னெடுத்து வருவதாக குறிப்பிடப்படுகின்றது.

எனினும் உயிரிழந்த சிறுவன் தொடர்பிலான மேலதிக தகவல்கள் எதனையும் பொலிஸார் வெளியிடவில்லை.