ரொறன்ரோவில் வீடுகளின் விற்பனை 15 சதவீதத்தால் வீழ்ச்சி!

ரொறன்ரோ பெரும்பாகத்தில் நவம்பர் மாதத்தில் வீடுகளின் விற்பனை 15 சதவீதத்தினால் வீழுச்சியடைந்துள்ளது.


அதேவேளை விற்கப்படும் விடுகளின் விலைகள் 3.5 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ரொறன்ரோ பெரும்பாகத்தில் 6,251 வீடு விற்பனை பரிமாற்றங்கள் கடந்த மாதத்தில் மட்டும் இடம்பெற்றுள்ள போதிலும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 14.7 சதவீதம் குறைவு என்று கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும் போதும் நவம்பர் மாத விற்பனை எண்ணிக்கை 3.4 சதவீதம் குறைவு என்றும் கூறப்படுகிறது

எனினும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது வீடுகளின் விற்பனை விலை, ஏறக்குறைய 788 டொலர்களினால், அதாவது 3.5 சதவீதத்தினால் அதிகரிப்பினை பதிவு செய்துள்ளதாகவும், எனினும் ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 0.8 சதவீத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.