தளிர் இதழ் 5வது ஆண்டு விழா – ஊடகவியலாளர் சந்திப்பு

ரொரன்ரோவை மையமாகக் கொண்டு தமிழர் தேசமெங்கும் உலாவரும் ‘தளிர்’ காலாண்டு சஞ்சிகை தனது ஐந்தாவது ஆண்டு நிறைவை கொண்டாடுமுகமாக அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.   எதிர்வரும் 8ம் திகதி (சனிக்கிழமை) விழா இடம்பெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ள நிலையில், விழா பற்றிய தகவல்கள் தமிழ் மக்களை சென்றடையும் வகையில், கடந்த 2 ஆம் திகதி ஞாயிறு அன்று TapScott Road இல் அமைந்திருக்கும் ‘செந்தாமரை கலையரங்கில் ஊடக சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தாகள்.


Thalir Press Meet

மாலை 5 மணியளவில் ஆரம்பமான நிகழ்வில் ஊடகவியலாளர்கள் மட்டுமல்லாமல், தளிர் இதழின் வெளியீட்டு நிர்வாகிகள், அபிமானிகள், மற்றும் கலை நிகழ்வுகளில் பங்குகொள்ளும் கலைஞர்கள் என நுாற்றுக்கும் மேற்பட்டவர்கள் பங்கு பற்றியிருந்தார்கள்.

இவ்விழாவுக்கு சென்று தளிர் சஞ்சிகைக்கு ஆதரவு வழங்கி, நிகழ்ச்சிகளை ரசித்து, இந்த அரிய முயட்சிக்கு ஆதரவு வழங்குமாறு சக ஊடகம் என்ற வகையில் எல்லோரையும் கேட்டுக்கொண்டு எமது ஆதரவையும் வழங்குகின்றோம்.

Thanks Photo Credits: மு.க தமிழ், பறை ஊடகம்