தலைமறைவாகியுள்ள சந்தேக நபர்களை கைது செய்ய நடவடிக்கை!

கனடாவின் ரொறன்ரோவிலுள்ள  Danforth Village பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள கத்திக்குத்துத்தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உள்ளுர் நேரப்படி நேற்று(வியாழக்கிழமை) இரவு இந்த கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

கத்திக்குத்து தாக்குதலில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்தநிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூன்று சந்தேக நபர்கள் தலைமறைவாகியுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.