ரொறன்ரோ பெரும்பாகத்தில் 6 மணித்தியாலங்களில் 3 பேர் உயிரிழப்பு!

மிசிசாகாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 63 வயதுடைய பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். இந்த உயிரிழப்புடன் சேர்த்து கடந்த செவ்வாய்க்கிழமை ரொறன்ரோ பெரும்பாகத்தில் 6 மணித்தியாலங்களில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

எரிந்தலை ஸ்டேஷன் ரோடு மற்றும் டன்டாஸ் ஸ்ட்ரீட் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு 7:45 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன் போது சம்பவ இடத்திலேயே பாதசாரியான குறித்த 63 வயதுடைய பெண் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் காரின் சாரதி விசாரணைக்குற்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை இதற்க்கு முன்னர் Malton பகுதியில் தூண் நாடும் வாகனம் மோதி 79 வயது பெண்ணொருவர் உயிரிழந்தார். அத்தோடு ஸ்கார்பரோ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 60 வயதுடைய ஆணொருவரும் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.