கடுமையாக பணியாற்ற அனைவரும் முன்வர வேண்டும் – ஜோன் ரொறி அழைப்பு

முன்னெப்பேர்தும் இலலாத அளவுக்கு கடுமையாக பணியாற்ற முன்வருமாறு ரொறன்ரோ மாநகரசபை உறுப்பினர்களுக்கு ரொறன்ரோ மேயர் ஜோன் ரொறி அழைப்பு விடுத்துளளார்.

அண்மையில் நடைபெற்று முடிந்த ரொறன்ரோ மாநகரசபைத் தேர்தலில் இரண்டாவது தடவையாகவும் நகரபிதாவாக ஜோன் ரொறி தேர்வாகியுளளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தேர்தலின் பின்னர் முதல் முறையாக நேற்று (புதன்கிழமை) பிற்பகல் மாநகரசபையின் முதலாவது அமர்வு நடைபெற்றது.

ஒன்ராறியோ முதர்வர் டக் ஃபோர்ட்டின நடவடிக்கையால் ரொறன்ரோ நகரசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை பாதியளவு குறைவடைந்துள்ள நிலையில், அந்த சிறிய அவையில் நகரபிதா ஜோன் ரொறி உரையாற்றியிருந்தார்.

இதன்போது குறித்த இந்த உறுப்பினர் குறைப்பு விடையத்தில் தேர்தலுக்கு முன்னர் காணப்பட்ட அரசியல் போட்டியினை புறந்தள்ளிவிட்டு, நகரின் வளர்ச்சியை நோக்காக கொண்டு செயற்பட வேண்டும் என்று நகரபிதா ஜோன் ரொறி வேண்டுகோள் விடுத்து்ளளார்.

இவ்வாறான அரசியல் போட்டிகளுக்கு மாறாக, ரொறன்ரோவை மிகச் சிறந்த நகரமாக மாற்றியமைப்பது குறித்தும், உள்ளூராட்சி மன்றங்களினால் அதிக பட்சம் எவற்றையெல்லாம் சாதிக்க முடியும் என்பதனை நிரூபித்து காட்டும் வகையிலும் செயற்பட அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

குறிப்பாக பல்வேறு ஏனைய இடங்களிலும் தற்பேர்து வெளிப்படையாகவே காணப்படும் பிரித்தாளும் அரசியல் செயற்பாடுகளை புறந்தள்ளிவிட்டு, முன்னெப்பேர்தும் இல்லாத அளவுக்கு கடுமையாக பணியாற்றுவதற்கு மாநகரசபை உறுப்பினர்கள் முன்வர வேண்டும் என்றும் மேயர் ஜோன் ரொறி வேண்டுகோள் விடுத்துள்ளார்.