கனடாவின் மிகப்பெரிய குகை பிரிட்டிஷ் கொலம்பியாவில் கண்டுபிடிப்பு

பிரிட்டிஷ் கொலம்பியாவில் சுமார் 135 மீற்றர் ஆழமான புதிய குகையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியாவில் மிகவும் பின்தங்கிய பள்ளத்தாக்கில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த குகையானது, நாட்டின் மிகப் பெரிய குகையாக விளங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற மாகாண அமைச்சின் ஹெலிகொப்டர் குழுவொன்றினால் பிரிட்டிஷ் கொலம்பியாவின் வடகிழக்கு பகுதியான வெல்ஸ் க்ரே மாகாண பூங்காவில் இந்த குகை கடந்த மார்ச் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த குகையை கடந்த செப்டம்பர் மாதம் முதல் முறையாக பார்வையிட்ட புவியியலாளர் கெத்தரின் ஹிக்சன், இந்த கண்டுபிடிப்பானது குகை ஆய்வில் வியத்தகு புதிய அத்தியாயம் எனக் குறிப்பிட்டார்.