மனித உரிமைகளுக்காக கனடா எப்போதும் துணை நிற்கும் – சவுதியிடம் தெரிவித்தார் கனடா பிரதமர்

மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு கனடா எப்போதும் துணை நிற்கும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்துள்ளார்.

கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோவிற்கும் சவுதி அரேபியாவின் இளவரசர் முகம்மது பின் சல்மானுக்கும் இடையிலான சந்திப்பு  நேற்று முன்தினம் (சனிக்கிழமை) இடம்பெற்றது. இதன் பின்னரான விருந்து நிகழ்ச்சியில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் இருநாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டாதாக அவர் தெரிவித்தார்.

இதன்போது ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடனான சந்திப்பு குறித்து தெரிவித்த அவர், கடந்த மாதம் ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட கப்பல்களிலிருந்த உக்ரேனிய மாலுமிகளை விடுதலை செய்யுமாறு ரஷ்ய ஜனாதிபதியிடம் வலியுறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.