கனடா – பிரித்தானிய பிரதமர்களுக்கிடையில் சந்திப்பு

கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோ, பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயை ஆர்ஜென்டீனாவில் சந்தித்தார்.

ஜி-20 மாநாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கூடியுள்ள அரச தலைவர்கள் அங்கு நாடுகளுக்கிடையிலான சந்திப்பை மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில் இதன் ஒரு அங்கமாக இருநாட்டுத் தலைவர்களின் சந்திப்பு நேற்று முன்தினம் (சனிக்கிழமை) இடம்பெற்றுள்ளது.

இதன்போது ஜி-20 நாடுகளின் ஒத்துழைப்புகள் மற்றும் உலக பொருளாதார நிதி நெருக்கடிகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு ஜி-20 உச்சி மாநாடு 20 தொழில் மயமாக்கப்பட்ட நாடுகளின் பொருளாதார, நிதி மற்றும் பாதுகாப்பு விடயங்கள் தொடர்பில் அதிக கரிசனை செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.