ஒன்ராறியோ மாகாண பொலிஸ் ஆணையாளராக றொனால்ட் ரவேனர் நியமிப்பு!

கனடா – ஒன்ராறியோ மாகாணத்தின் புதிய பொலிஸ் ஆணையாளராக ரொறன்ரோ பொலிஸ் அத்தியட்சகர் தர அதிகாரியான றொனால்ட் ரவேனர் நியமிக்கப்பட்டுள்ளார்.


சமூக பாதுகாப்பு மற்றும் சீர்திருத்த சேவைகள் துறை அமைச்சர் சில்வியா ஜோன்சினால் இந்த நியமனம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ரொறன்ரோ பொலிஸ்துறையின், 12, 23 மற்றும் 31ஆம் பிரிவுக்ளுக்கான தலைமை அதிகாரியாக கடமையாற்றிவரும் றொன் ரவேனர், எதிர்வரும் 17 ஆம் திகதி தனது புதிய பொறுப்பை ஏற்றுக் கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1967 ஆம் ஆண்டிலிருந்து பொலிஸ்துறையில் சேவையாற்றிவரும் அவர், திட்டமிடப்பட்ட குற்றச்செயல்கள் ஒழிப்பு பிரிவு மற்றும் புலனாய்வு பிரிவு ஆகியவற்றிலும் ரவேனர் செயலாற்றியுள்ளார்.