இராணுவ பயிற்சி திட்டத்தை புதுப்பிக்குமாறு கனடாவிடம் உக்ரேன் கோரிக்கை

இராணுவ பயிற்சி திட்டத்தை புதுப்பிக்குமாறு கனடாவிடன் உக்ரேன் கோரிக்கை விடுத்துள்ளது.

ரஷ்யாவுடன் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையிலேயே உக்ரேனின் இந்த முன்மொழிவு முன்வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கனடா தமது இராணுவ பயிற்சி திட்டத்தை புதுப்பிக்கும் என நம்பிக்கையுடன் எதிர்பார்ப்பதாக உக்ரேன் அரசியல்வாதியான அன்ட்ரி ஷெவ்சென்கோ தெரிவித்துள்ளார்.

கடந்த வார இறுதியில், கருங்கடலில் 3 உக்ரேனிய கப்பல்கள் மற்றும் 24 மாலுமிகளை ரஷ்ய படைகள் கைப்பற்றியது.

ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையே கடல்பகுதியில் நடந்த மோதலைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் இடையே ஜி-20 மாநாட்டின்போது நடைபெறவிருந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.