சீரற்ற கால நிலை காரணமாக Stouffville உட்பட Toronto பெரும்பாகத்தில் இன்று இரவு நடைபெறவிருந்தவான வேடிக்கைகள் தடைபடுமென விழா ஏற்பாட்டாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர் …. 2019ம் ஆண்டு புதிய வருடம் இன்று நள்ளிரவு பிறக்கிறது. இன்று இரவு இடம்பெறும் புது வருட கொண்டாட்டங்களை முன்னிட்டு TTCயும் GO போக்குவரத்து நிறுவனமும் தமது சேவைகளை நீடித்திருக்கின்றன. தமது சேவைகள் நாளை அதிகாலை 4 மணி வரை நீடிக்கப் பட்டிருப்பதாக TTC அறிவித்திருக்கிறது.Read More →

புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு கனடாவின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு புத்தாண்டானது நியுசிலாந்து மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளில் பிறந்துள்ள நிலையில், கனேடியர்கள் புத்தாண்டை வரவேற்க தயாராகி வருகின்றனர். இந்தநிலையில் கனடாவின் முக்கிய நகரங்களில் உள்ள வணிக நிலையங்கள், இரவு விடுதிகள், முக்கிய உணவகங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அதிகளவான பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. புத்தாண்டு கொண்டாட்டங்களின்Read More →

உண்மையான முடி நன்கொடைகளை ஏற்றுக்கொள்ள தயாராகவுள்ளதாக, கனேடிய புற்று நோய் அமைப்பு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 31ஆம் திகதியுடன் உண்மையான முடி நன்கொடைகளை வழங்கும் திட்டம் முடிவுக்கு வரவுள்ளது. எனினும் இவ்வாறான நன்கொடைகளை முழு மனதுடன் ஏற்றுக்கொள்ள நாம் தயாராகவுள்ளதாக கனேடிய புற்று நோய் அமைப்பு கூறியுள்ளது. கடந்த 2007ஆம் ஆண்டு கையொப்பமிடப்பட்ட இந்த திட்டத்தின் ஊடாக நாடு முழுவதும் முடிகள் நன்கொடையளிக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன. இந்நிலையில் தற்போது செயற்கை முடிRead More →

கனேடிய நாட்டவரான சாரா மெக்ல்வரை நெருக்கடியான அரசியல் சூழலுக்கு மத்தியிலும் சீனா விடுவித்துள்ளதாகவும், அவர் கனடாவுக்கு திரும்பியிருப்பதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. சீனாவில் சட்டரீதியற்ற வகையில் பணி புரிந்தமைக்காக இந்த மாத ஆரம்பத்தில் கைது செய்யப்பட்ட அல்பெர்ட்டாவைச் சேர்ந்த ஆசிரியை ஒருவரே இவ்வாறு விடுவிக்கப் கனடாவின் சர்வதேச விவகாரங்களுக்கான அமைப்பு, தமது நாட்டு பிரஜை விடுவிக்கப்பட்டமையை உறுதி செய்துள்ளதுடன், அவரின் உண்மையான பெயர் விபரங்களை வௌியிடவில்லை.  மெக்ல்வர் மேலும்Read More →

மெக்கில் பல்கலைக்கழகத்தின் (McGill’s medical museum), நூறு ஆண்டுகள் பழமையான மேட் அபோட் மருத்துவ அருங்காட்சியகம், மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. எலும்புக்கூடுகள், மூளை, முதுகெலும்பு ஆகியன இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அத்தோடு உண்மையான சில மனித உறுப்புக்கள் இங்கு இரசாயன திரவம் கலந்த போத்தல்களில் அடைக்கப்பட்டும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. பழமையான மாதிரிகள் 1820ஆம் ஆண்டுகளில் இருந்து உள்ளன. திகில் நிறைந்த குறித்த அருங்காட்சியகம், நூறு ஆண்டுகளுக்கு முன்னர் மருத்துவ மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களால்Read More →

அமைதியான ஆர்ப்பாட்டங்கள் எந்நேரத்திலும் வன்முறையாக மாறலாம். எனவே, இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்வோர் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என கனடாவின் புதுப்பிக்கப்பட்ட பயண ஆலோசனையில் எச்சரிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் அரசியல் நெருக்கடிகள் தீர்ந்துள்ள நிலையில், இலங்கை குறித்த தமது பிரஜைகளுக்கான புதுப்பிக்கப்பட்ட பயண ஆலோசனையை கனடா வெளியிட்டுள்ளது. அதன்படி, இலங்கையில் அரசியல் ஸ்திரமின்மை என்ற பதம் புதுப்பிக்கப்பட்ட பயண ஆலோசனையிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. எனினும், இலங்கையில் அமைதியான முறையில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்கள் வன்முறையாகRead More →

சீனாவில் போதைப்பொருள் குற்றச்சாட்டுகள் தொடர்பில் கைது செய்யப்பட்ட கனடா நாட்டவர் ஒருவர் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்று சீன உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு, சீனாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான ராஜதந்திர சர்ச்சையை மேலும் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. ரொபர்ட் லொய்ட் (Robert Lloyd) என்ற கனேடிய நாட்டவர் சீனாவின் டாலியன் (Dalian) நகருக்குள் போதைப்பொருளைக் கடத்த முயன்றபோது கைது செய்யப்பட்டார். இந்தநிலையில் அவர், நாளை (சனிக்கிழமை) நீதிமன்றத்தில் விசாரணைக்குRead More →

மிசிசாகுவா பகுதியில் உள்ள மதுபான விற்பனை நிலையத்திற்கு வெளியே பொதுமக்களை வாகனத்தால் மோதிவிட்டு தப்பிச் சென்ற நபரை அடையாளம் கண்டுகொண்டுள்ளதாக பீல் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த சனிக்கிழமை காலை என்ஃபீல்ட் பிளேஸ் பகுதியில் உள்ள கரெஸ்டோ பார் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் தனது வாகனத்தில் ஏறி நடைபாதையில் சென்றுகொண்டிருந்த பாதசாரிகள் மீது மோதியுள்ளார். இதில் 5 பேர் காயமடைந்தனர். இதில் 23 வயதுடைய பெண்Read More →

உலக எண்ணெய் விலைகள் தற்போது வீழ்ச்சியடைந்ததால் கனடாவின் பெரும்பகுதிகளில் எரிபொருள் விலை குறைவடைந்துள்ளது. இருப்பினும் அடுத்த ஆண்டு எரிபொருளின் விலை அதிகரிக்க கூடும் என எரிபொருள் விலை நிபுணர்கள் கூறுகின்றனர். கடந்த 18 மாதங்களாக குறைவாக இருந்த எரிபொருளின் விலை கடந்த இரு மாதங்களாக ஏற்பட்ட பொருளாதார நிலை காரணமாக மேலும் வீழ்ச்சியடைந்தது என ஒரு மூத்த பெட்ரோலிய ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார். அதன் அடிப்படையில், கடந்த புதன்கிழமை சராசரியாக வழக்கமானRead More →

இன்று காலையில் ரொரன்ரோ Entertainment Districtஇல் இடம்பெற்ற கத்திக் குத்துச் சம்பவத்தில் ஆண் ஒருவர் பாரதூரமான காயங்களுக்கு உள்ளான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று அதிகாலை 2 மணியளவில் Richmond Street மற்றும் Spadina Avenue பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரண்டு குழுக்கள் இடையே மோதல் இடம்பெறுவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினை அடுத்து தாம் சம்பவ இடத்தைச் சென்றடைந்த வேளையில், அங்கே இரண்டு ஆண்கள் காயமடைந்த நிலையில் காணப்பட்டதாகவும், அவர்களில்Read More →