யாழ். இந்து அதிபரின் பழைய மாணவருக்கான வேண்டுகோள்.

அனைத்து பழைய மாணவர் சங்கங்களுக்கும் அன்பார்ந்த வேண்டுகோள்,


எமது பாடசாலையின் பெயரிலோ அல்லது பாடசாலையின் பெயரில் இயங்கும் சங்கங்களின் பெயரிலோ நடைபெறும் நிகழ்ச்சிகள், ஒன்றுகூடல்கள், மற்றும் ஏனைய நிகழ்வுகளில் அசைவ மற்றும் மதுபான பாவனைகளைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் தாழ்மையாகக் கேட்டுக்கொள்கின்றேன்.

இதன்மூலம் எமது பாடசாலையின் சமய மற்றும் பண்பாட்டு விழுமியங்களை பாதுகாப்பதுடன் அடுத்த தலைமுறைக்கும் ஊடுகடத்த உதவியாக இருக்கும்.

பாடசாலையில், யாழில் போதைவஸ்து, மதுபாவனை அதிகரிப்பும் அதன் தவிர்ப்பையும் பற்றி நாம் பேசுகின்ற வேளையில் எமது கல்லூரிப் பெயரால் எமது சங்கங்கள் இவற்றை தவிர்த்து முன்னுதாரணமாக இருந்தால் நல்லது என்பது எனது கருத்து.

எமது பாடசாலையில் சிவஞான வைரவப்பெருமான், ஞானலிங்கேசுவரர் வீற்றிருந்து அருள்பாலிக்கின்ற நிலையில் பாடசாலையின் புனிதம் காப்பது எமது கடமை. அத்துடன் எமது பாடசாலை அல்லது அதனுடன் தொடர்பான இலட்சினையையும் நீங்கள் பாவிக்கும் போது பாடசாலையின் பாரம்பரிய ஒழுங்குமுறைகளைப் பின்பற்றுவத சாலச்சிறந்தது.

இது எனது அன்பான கோரிக்கை. இதனை நீங்கள் சாதகமாக பரிசீலித்து உகந்த நடவடிக்கை எடுத்தால் மகிழ்ச்சி.

“எவ்விடமேகினும் எத்துயர் நேரினும் எம்மண்ணை நின்னலம் மறவோம்”

அதிபர்

Satha Nimalan