RICHMOND HILL’ல் பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டில் தமிழர் ஒருவர் கைது!

ரிச்மண்ட் ஹில்லின் நகரத்தில் நடந்த ஒரு பாலியல் தாக்குதல் மற்றும் பாலியல் துஸ்பிரயோக நடந்ததாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டில் விசாரணை நடத்திய யார்க் பிராந்திய பொலிஸ் பிரிவு #2 குற்றவியல் புலனாய்வுப் பிரிவினர் 22 வயதுடைய டொரோண்டோ தமிழரான பிரசாந் சண்முகவடிவேல் (Pirasan SANMUGAVADIVEL, 22, City of Toronto) மீது பாலியல் தாக்குதல் குற்றச்சாட்டுக்களை பதிவு செய்துள்ளனர்.

புதன்கிழமை, அக்டோபர் 31, 2018 அன்று, ஹாலோவீன் இரவு (Halloween night) சுமார் 8 மணியளவில், இனம்தெரியாத மனிதர், யங் ஸ்ட்ரீட் மற்றும் வெல்டிக் ரோட் வெஸ்டின் (Yonge Street and Weldrick Road West) பகுதியிலுள்ள 45 பாஃபிஃப் பவுலார்ட் (45 Baif Boulevard) என்ற இடத்தில் உள்ள ஒரு அபார்ட்மெண்ட் கட்டிடத்தின் வரவேற்பு பகுதியில் இரண்டு இளம் பெண்களை அணுகி பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

இந்த விசாரணை தொடர்பான நபர் கடந்த கிழமை (Nov 24, 2018) போலீசாரிடம் சரணடைந்துள்ளார்.

இவரால் மேலும் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கின்றார்களா என அறிய குற்றம் சாட்டப்பட்டவரின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர்.

குற்றம்சாட்டப்பட்டவர்:

•பிரசாந் சண்முகவடிவேல், 22, டொராண்டோ நகரம்

சுமத்தப்பட்டகுற்றங்கள்:

• பாலியல் தாக்குதல்
• குற்றவியல் துன்புறுத்தல் x2
• ப்ராபேஷன் முறிவு

இவர் இப்பொழுது பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். வரும் டிசம்பர் 28, 2018 அன்று நியூ மார்க்கெட் (Newmarket, ONT), ஒன்டாரியோ நீதிமன்ற நீதிபதிமுன் முன்னிறுத்தப்படுவார்.


Source: York Regional Police  – CHARGES LAID FOLLOWING SEXUAL ASSAULT IN RICHMOND HILL