டொரோண்டோவில் ‘2.O’ பிரம்மாண்ட 3D திரைப்படம் வெளியீடு!

ஈழத்தமிழன் சுபாஸ்கரன் அல்லிராஜா தயாரிப்பில் (Lyca Production), ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார் நடிப்பில், A.R ரகுமான் இசையில் 2.O (2D & 3D Movie; முப்பரிமாண திரைப்படம்) திரைப்படம், உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது.  இந்திய சினிமா வரலாற்றிலேயே அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் 2.o ஆகும்.

இன்று டொரோண்டோவில் Woodside சினிமா, யார்க் (York) சினிமா, Landmark Cinemas (24 Whitby) மற்றும் ஆல்பியன் (Albion) சினிமாவில் இன்று (Nov 28, 2018) மாலை 6:45/7:00/7:30/9:45/10:00/10:45 காட்சிகளாக வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் சுமார் 625 திரையரங்குகளிலும் உலகம் முழுவதிலும் 10 ஆயிரம் திரையரங்குகளிலும் ‘2.O’ இத்திரைப்படம் வெளியானது.  திரைப்படத்தின் முதல்காட்சிக்காக ஏராளமான ரசிகர்கள் திரையரங்குகளில் குவிந்தனர்.

இதன் கதைக் கரு. தனது வாழ்வை சீரழித்த மக்களை, தனி ஒரு ஆளாக நின்று பழிவாங்குவதே ஆகும்.

கதைக்களம்

படத்தின் ஆரம்பத்திலேயே அக்‌ஷய் குமார் செல்போன் டவரில் தூக்கு போட்டு இறக்கின்றார்.  அதை தொடர்ந்து அடுத்த நாளில் இருந்து தமிழகத்தில் உள்ள அனைத்து செல்போன்களும் தொலைந்து போகிறது.

இந்த மாயம் எப்படி நிகழ்கிறது என்று ஆராய்ச்சிக்குழு அரசாங்கத்தின் கீழ் ஆராய்ச்சி செய்யும் போதே பல செல்போன் உரிமையாளர்களும், டெலிகாம் மினிஷ்டரும் இறந்து போகின்றனர்.

அதன் பிறகு விஞ்ஞானி வசீகரன் அறிமுகம் ஆகிறார். அவருடைய உதவியாளராக நிலா என்கிற மனித வடிவிலான ரோபோவும் அறிமுகம் ஆகிறது.  இதற்கடுத்த காட்சியில் ஒவ்வொருவர் கையில் இருக்கும் மொபைல் போன்களும் வான் நோக்கி ஈர்க்கப்படுகின்றன.

இந்த விபரீத நிகழ்வு குறித்து விசாரிக்க, விஞ்ஞானி வசீகரன் அழைக்கப்படுகிறார்.  அப்போது, பிரச்சனையை தீர்க்க ஏற்கனவே பிரித்து அழிக்கப்பட்ட சிட்டி ரோபோவை மீண்டும் உருவாக்க வேண்டும் என்று கூறுகிறார்.  தொழில்நுட்ப ரீதியில் 2.0 படம் மிகப் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ளது.

வானில் பறக்கும் செல்போன்கள் காட்சி, வனப்பகுதி முழுவதும் செல்போன்களால் ஒளிரும் காட்சி, ராட்சத பறவை திரையில் வரும் காட்சி உள்ளிட்டவை பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

இப்படத்தின் காட்சிகளில் ஏலியன்ஸ், டெர்மினேட்டர் 2, கோஸ்ட்பஸ்டர்ஸ் உள்ளிட்ட சில ஆங்கில படங்களின் சாயல் இருக்கிறது.  சிட்டி ரோபோ அறிமுகமான பிறகு, படம் வேகம் கூடுகிறது.

சிட்டிக்கும், ராட்சத பறவைக்கும் இடையிலான சண்டை காட்சிகள் பார்வையாளர்களை நிச்சயம் ஆச்சரியத்தில் உறைய வைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஹாலிவுட் படங்களுக்கு இணையாக தரம் மற்றும் தொழில்நுட்பத்தில் ஒரு தமிழ் படத்தை ஷங்கர் உருவாக்கியுள்ளதாக ரசிகர்கள் நிச்சயம் கொண்டாடலாம்

தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் ‘2.O’ திரைப்படம் உலகளாவிய ரீதியில் மிகப் பிரம்மாண்டமாக திரைக்கு வந்திருக்கின்றது.

இத்திரைப்படம் திரையரங்கில் பார்ப்பதே இந்த படத்தின் பிரம்மாண்டத்தையும், கிராபிக்ஸ் காட்சிகளை ரசிக்க முடியும்.


முழுமையான  2.O திரைப்பட விமர்சனம் – Review (TamilStar.com)

http://www.tamilstar.com/tamil/moviereview-id-2.o–rajini–amy–akshay-kumar–shankar–review745.htm