வறிய மக்களுக்காக குரல் கொடுத்து வந்த ஹரி லெஸ்லி காலமானார்!

உலக அளவிலான வறுமைக்கு எதிராக போராடிவந்த பிரபல செயற்பாட்டாளர் ஹரி லெஸ்லி தனது 95ஆவது வயதில் இன்று காலமானார்.
இன்று காலையில் ஒன்ராறியோ மருத்துவமனையில் ஹரி லெஸ்லி உயிரிழந்ததை அவரது மகன் உறுதிப்படுத்தியுள்ளார்.
இவர் இரண்டாம் உலகப் போரின் காலத்தில் பிரித்தானிய விமானப் படையில் பணியாற்றிவந்தவர் என்பதுடன், வறிய மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்தும் வந்தார்.
ஹரி லெஸ்லி வீழந்து காயமுற்ற நிலையில் ஒன்ராறியோவின் Bellevilleஇல் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
அவருக்கு கீச்சகப் பக்கத்தில் அவரை பின்தொடரும் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் பேருக்கும் அதிகமானவர்களும், ஏனைய சமூக வலைத்தள அன்பர்கள் எனப் பல ஆறுதல் தெரிவித்து வந்தனர்.
பிரதமர் ஜஸ்டின் ரூடோ, நடிகர் Mia Farrow, பிரித்தானிய தொழிற்கட்சித் தலைவர் ஜேர்னி கோர்பைன் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று வேண்டுதல் செய்தனர்.