பிரஞ்சு கனடியர்களை ஆதரிக்க டக் போர்ட் மறுப்பு – பிரதமர் இன்று முக்கிய சந்திப்பு!

மத்திய அரசாங்கத்தின் முக்கிய கட்சிகளுடன் பிரதமர் ஜஸ்டின் ரூடோ இன்று (புதன்கிழமை) முக்கிய பேச்சுவார்த்தை ஒன்றினை நடத்தவுள்ளார்.

கடந்த வாரம், டக் போர்ட் அரசாங்கம் ரொறன்ரோவில் ஒரு நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட பிரஞ்சு மொழி பல்கலைக்கழகத்தை உருவாக்குவதற்கான திட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்தது.

இந்நிலையில் இன்று இடம்பெறும் இந்த சந்திப்பின் போது பிரஞ்சு கனடியர்களை ஆதரிக்க என்ன செய்யலாம் என்பது தொடர்பில் கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதன் படி குறித்த சந்திப்பில் புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜக்மீத் சிங், கனடாவின் பசுமைக் கட்சியின் தலைவர் எலிசபெத் மே, கன்சர்வேடிவ்வின் ஆண்ட்ரூ ஷெர்ர், பிளாக் கியூபெக்கோஸ் இடைக்கால தலைவர், மரியோ பௌலீயு ஆகியோர் பங்குபற்றவுள்ளார்.