டொரோண்டோவில் “ இருப்பாய் தமிழா நெருப்பாய்” எழுச்சிவிழா!

கனடா ஈழமுரசு நடாத்திய தமிழீழ தேசியத் தலைவரின் அகவை 64 தலைவன் பிறந்தநாள் தமிழன் நிமிர்ந்த நாள் எழுச்சி விழா 26.11.2018 திங்கள் பிற்பகல் டொரோண்டோ மாநகரில் அமைந்துள்ள மெட்ரோ பொலிட்டன் மண்டபத்தில் (Metropolitan Centre) எழுச்சியுடன் மிக எழுச்சியுடன் நடைபெற்றது.


இந்நிகழ்வில் “சுதந்திர பறவைகள்” இசைக்குழு வழங்கிய தமிழீழ எழுச்சிப் பாடல்களும், தேசியத்தலைவரின் வாழ்த்துப் பாடல்களும் எழுச்சிக் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

நிகழ்வில் நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் கானொலியூடாக சிறப்புரையாற்றினார். அத்துடன் முன்னாள் உலக தமிழர் இயக்க பொறுப்பாளர் ரெஜி மற்றும் மாதகல் கண்ணன் ஆகியோரது உரைகளும் இடம்பெற்றன.

பெருமளவிலான டொரோண்டோ வாழ் தமிழீழ உறவுகள் “தங்கள் தலைவன் பிறந்தநாள் தமிழன் நிமிர்ந்தநாள்” எழுச்சிவிழாவில் உறுதியுடன் பங்கெடுத்திருந்தனர்.

வாரநாளில் மண்டபம் நிறைந்த எழுச்சி விழாவாக இது அமைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Photo Credit: Gana Ninaivukal