ஜி.எம். ஊழியர்களுக்கு தேவையான அனைத்தையும் செய்வோம்: கனேடிய பிரதமர்

ஜெனரல் மோட்டர்ஸ் நிறுவன ஊழியர்களுக்கு தேவையான அனைத்தை நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம் என, கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.


ஜெனரல் மோட்டர்ஸ் நிறுவனம் தனது ஒஷாவா ஆலையை மூடுவதாக அறிவித்தது.

இந்நிலையில், இவ்விடயம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நேற்று (திங்கட்கிழமை) உரையாற்றுகையிலேயே கனேடிய பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”ஜெனரல் மோட்டர்ஸ் நிறுவனத்தின் தீர்மானம் மிகுந்த ஏமாற்றமளித்துள்ளது.

இந்நிலையில், ஜெனரல் மோட்டர்ஸ் மூடப்படுவதால் அதனால் பாதிக்கப்படும் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரது நிலை குறித்து நாம் மிகுந்த கவனம் கொண்டுள்ளோம்.

அதற்கமைய இந்த இக்கட்டான தருணத்தில் அவர்களுக்கான அனைத்து உதவிகளையும் எம்மால் முடிந்தவரை செய்வதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.