தமிழ் தேசிய இனத்தின் முகமும், முகவரியும் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் இன்று

தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் 64வது பிறந்த தினம் இன்று! அவர்களிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

எந்தப் பெயரை எவர் சொல்லக் கேட்டாலும் நெஞ்சம் நெகிழுமோ, கண்கள் பனிக்குமோ, செவிகள் குளிருமோ, பொங்கிப் பொங்கி பெருமிதம் பெருக்கெடுத்து வழியுமோ… அந்தப் பெயர் பிரபாகரன். தமிழர்களாகிய நாங்கள் இப்பூவுலகில் வாழ்ந்தோம் என்பதற்கான சாட்சியமாய் அமைந்த நித்தியமான கல்வெட்டு உங்களது பெயர்.

உங்கள் தலைமையின் கீழ் நாங்கள் தோல்வியடையவில்லை. மாறாக, ஏகாதிபத்திய பேராசை கொண்ட வல்லூறுகளாலும், பிராந்திய அதிகாரத்தை விழைந்த வஞ்சகர்களின் கூட்டுச்சதியினாலும் பேரினவாத வெறியினாலும் வீழ்த்தப்பட்டோம்.

உங்கள் வரலாறுதான் எங்களுக்கு வழிகாட்டி. உங்கள் பெயர்தான் எம்மைச் செலுத்திச் செல்லும் பெருமித உந்துசக்தி. உங்கள் இன்மையே இம்மண்ணில் நித்திய இருளெனக் கவிந்துவிட்ட மாபெரும் துயரம்.

இன்று பிறந்தீர்கள். எங்கள் இனத்துள் நிறைந்தீர்கள்.
வணங்குகிறோம்.

இனியஅகவை 64 வாழ்த்துக்கள்

  • ஆக்கம் : தமிழ்நதி