தபால் ஊழியர்களின் பணிப் புறக்கணிப்பு போராட்டங்கள் முடிவு!

கடந்த சில வாரங்களாக நாடு தழுவிய அளவில் சுழற்சி முறையிலான பணிப் புறக்கணிப்பு போராட்டங்களை முன்னெடுத்துவந்த கனடா தபால் ஊழியர்கள் மீண்டும் வேலைக்கு திரும்புகின்றனர்.


நேற்று (சனிக்கிழமை) அதிகாலை வரையில் நீடித்த சிறப்பு நாடாளுமன்ற அமர்வில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை அடுத்தே, கனடா தபால் பணியாளர்கள் மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளனர்.

C-89 எனப்படும் குறித்த அந்த சட்டமூலத்தின் மீதான மூன்றாது வாசிப்பின் பின்னர் இடம்பெற்ற வாக்கெடுப்பில் அதற்கு ஆதரவாக 166 வாக்குகளும் எதிராக 43 வாக்குகளும் பதிவாகியுள்ளன.

அந்த வகையில் குறி்தத அந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட நிலையில், இதுவரை நாளும் சுழற்சி முறையிலான பணிப் புறக்கணிப்பு போராட்டத்தினை நீண்ட நாட்களாக மேற்கொண்டுவந்த கனடா தபால் பணியளர்கள் மிண்டும் பணிக்கு திரும்பியுள்ளனர்.

இதேவேளை நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானம் மீதான ஆய்வுகளை மேற்கொள்ள செனட் சபை இன்று கூடும் எனவும், தேவைப்பட்டால் நாளையும் அது நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை இந்த தீர்மானம் நிறைவேற்ப்பட்டுள்ள போதிலும், கனடா தபால் நிறுவனமும் தொழிலாளர் சங்கமும் தமது பேச்சுவார்தையினை தொடர்ந்து மேற்கொள்ளலாம் என்று கனேடிய மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

குறித்த இரண்டு தரப்பும் அமர்ந்து பேசி ஒரு இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பு எனவும், எனினும் அவர்களால் முடியாதவிடத்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராக இருக்கவேண்டிய தேவை தமக்கும் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.