சேவையை நிறுத்துகிறது ஜெனரல் மோட்டர் நிறுவனம்: ஆயிரக்கணக்கானோர் வேலையிழக்கும் ஆபத்து!

கனடாவின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான ஜெனரல் மோட்டார் நிறுவனம், ஒசாவா மற்றும் ஒன்ராறியோவில் தனது கார் உற்பத்தி ஆலைகளின் சேவைகளை நிறுத்த தீர்மானித்துள்ளது.

இன்று (திங்கட்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த நிறுவனம் தமது சேவையை நிறுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிறுவனம் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பை வழங்கிவரும் நிலையில், இத்திடீர் முடிவால் அவர்கள் அனைவரும் வேலையை இழக்க நேரிடும்.

உலக மறுசீராக்கல் நடவடிக்கையின் கீழ், குறைந்தளவு காபன் உமிழ்வு அல்லது பூச்சியம் அளவான காபன் உமிழ்வு வாகனங்களை உற்பத்திசெய்ய உலக நாடுகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு அங்கமாகவே இந்நடவடிக்கை இடம்பெற்;றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.