தமிழர் தேசிய நினைவெழுச்சி நாள் 2018 – ஊடக சந்திப்பு

தமிழர் தேசிய நினைவெழுச்சி நாளான கார்த்திகை 27ஐ முன்னிட்டு கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம், ஊடகங்களுக்கான சந்திப்பு ஒன்றினை இன்று (Nov 24, 2018) ஒழுங்கு செய்திருந்தது.


தமிழர் தேசிய நினைவெழுச்சி நாள் 2018 – ஊடக சந்திப்பு

தமிழர் தேசிய நினைவெழுச்சி நாள் 2018 – ஊடக சந்திப்பு: Toronto

Posted by Toronto Tamil on Saturday, November 24, 2018

 

உலகே வியக்கும் ஒப்பற்ற தியாகங்களைப் புரிந்து தமது இனத்தின் விடியலுக்காய் வித்தாகிப்போன எமது மாவீரச் செல்வங்களின் நினைவுநாள் ஆண்டுதோறும் பேரெழுச்சியாக நினைவுகூரப்பட்டு வருகின்றது.  உலகத் தமிழர்கள் அனைவரினதும் சிந்தனைகளை ஒரேநேரத்தில் ஒருங்கிணைக்கும் கணமாக மாவீரர் நாளின் வணக்க நிகழ்வு காலங்காலமாக இடம்பெற்று வருகின்றது.  விடுதலை வேள்வியில் வித்தாகிய எமது கண்மணிகளை தமிழர்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு அஞ்சலிக்கும் இந்நாளே எம்மினத்தின் அதிமுக்கிய நாளாகும்.

தமிழர் தேசிய நினைவெழுச்சி நாளான கார்த்திகை 27, 11. 2018 இந்த ஆண்டும் வழமைபோல் மார்க்கம் ஃபெயர் கிரவுண்ட் (Markham Fair Ground) வெளியரங்கத் திடலில், ஒரே இடத்தில் மூன்று நிகழ்வுகளாக நடைபெறும் என்பதைக் கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம் கனடா வாழ் ஈழத் தமிழ் மக்கள் அனைவருக்கும் அறியத் தருகின்றது.

தேசிய நினைவெழுச்சி அகவத்தினால் இந்த நிகழ்வுகள் மூன்று அமர்வுகளாக மார்க்கம் Fair Ground மைதானத்தில் விசேடமாக ஒழுங்கமைக்கப்பட்ட வெப்பமூட்டப் பெற்ற கொட்டகை மண்டபத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களை உள்ளடக்கக்கூடியதாக ஒழுங்குகளை செய்துவருகின்றனர்.

முதலாவது நிகழ்வு காலை 7:00 மணிக்கும், மதிய நிகழ்வு 1 PM மணிக்கும், மாலை நிகழ்வு 6 PM மணிக்கும் ஆரம்பமாகும்.

தாயகக் கனவுடன் தம்மைக் கொடை செய்த எமது வீர மறத் தமிழ்ப் புதல்வர்களை நினைவில் ஏந்தி நின்று, வணங்கும் கல்லறைத் திருநாளான கார்த்திகை 27 தமிழர் தேசிய நினைவெழுச்சி நாளை உங்கள் அனைவரதும் முழுமையான ஒத்துழைப்போடு நடாத்தும் என்பதை அறியத் தருகின்றார்கள் அகவத்தினர்.

இம்முறை நிகழ்வில் அமையப்பெறுகின்ற 28 மாவீரர் மாதிரி துயிலும் இல்லங்களில், தமிழீழத்தில் உள்ள 28 மாவீரர் துயிலும் இல்லங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட மண்ணையும் மற்றும் சிதிலமாக்கப்பட்ட கல்லறைகளில் இருந்து சில பகுதிகளையும் மண்டபத்தில் அந்தந்த மாவீரர் சமாதிகளில் வைக்க ஏட்பாடுகளை செய்துள்ளார்கள்.

உலகத் தமிழர்களையும், தமிழினத்தின் விடுதலையின்பால் அக்கறை கொண்டவர்களையும் ஒருங்கிணைக்கும் சக்தியாகத் திகழும் இந்த மாவீரர்களை நினைவுகொள்ளும் எழுச்சிநாள் நிகழ்வு அனைவரையும் உள்வாங்கி நிகழ்த்தப்படும் ஒரு பொதுமைப்பட்ட நிகழ்வாக மேலும் சிறப்பாக நடாத்தவேண்டியது அனைவரினதும் கடமையாகும். தமிழினத்தின் விடுதலையின்பால் அக்கறையோடும் நேர்மையோடும் உழைத்த, உழைத்துக் கொண்டிருக்கும், உழைக்க முன்வரும் அனைத்துத் தரப்பையும் உள்ளடக்கியதாகவும் சமூகத்தின் அனைத்து கட்டமைப்புக்களும் பொறுப்புக்களைப் பகிர்ந்து கொள்ளும் உணர்வுடனும் தமிழ்மக்களால் முன்னெடுக்கப்படும் ஒரு நிகழ்வாவே எமது மாவீரச் செல்வங்களை நினைவுகூரும் தேசிய எழுச்சி நாள் அமையப்பெறுவது சாலச் சிறந்தது.

  • Thanks Photo/Video Credits: Sivavathani & Raj

TorontoTamil.com


மாவீரர் தினம் தேவைதானா புலம்பெயர் தேசத்தில்?