மோன்க்டொன் பகுதியில் காணாமல் போன இரு சிறுமிகள்: ரொறொன்ரோவில் கண்டுபிடிப்பு

மோன்க்டொன் பகுதியில் காணாமல் போன இரண்டு சிறுமிகளும், ரொறொன்ரோவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


17 வயது நிறைந்த வியட்னாம் மாணவிகளான இருவரும், மோன்க்டொன் உயர்நிலைப் பாடசாலையில் கல்வி கற்பவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருவரும், கடந்த நவம்பர் 12ஆம் திகதி அவர்களது விருந்தினர் குடும்பத்தில் வைத்து காணாமல் போயிருந்ததாக பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இதுகுறித்து தீவிர தேடுதல் வேட்டையை தொடர்ந்திருந்த பொலிஸார், இரண்டு சிறுமிகளையும் ரொறொன்ரோவில் வைத்து கண்டு பிடித்துள்ளனர்.

இதற்கிடையில் இச்சம்பவம் குறித்து பொலிஸார், தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.