உரிமையாளர்களின் துணிகரத்தால் பதறியோடிய கொள்ளையர்கள்!

மிசிசாகாவில் (Mississauga, Canada) நகைக் கடையொன்றில் (Nov 21, 2018, Around 12:15 p.m) இடம்பெறவிருந்த பாரிய கொள்ளை, கடை உரிமையாளர்களின் துணிகர செயலால் முறியடிக்கப்பட்டுள்ளது.

நகைக்கடையின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு கடைக்குள் நுழைந்த கொள்ளையர்களை கடை உரிமையாளர்கள் வாளைக் காட்டி விரட்டியடித்துள்ளனர்.

Mississauga jewellery store owners fend off robbery suspects with swords

மிசிசாகாவில் (Mississauga, Canada) நகைக் கடையொன்றில் இடம்பெறவிருந்த பாரிய கொள்ளை, கடை உரிமையாளர்களின் துணிகர செயலால் முறியடிக்கப்பட்டுள்ளது.https://www.torontotamil.com/2018/11/24/%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4/Mississauga jewellery store owners fend off robbery suspects with swords

Posted by Toronto Tamil on Saturday, November 24, 2018

கொள்ளையர்கள் துப்பாக்கியை காட்டி உரிமையாளர்களை மிரட்டிய போதிலும், தைரியமாக அவர்களை எதிர்கொண்டு வாளைக்காட்டி விரட்டியுள்ளனர்.

இதன்போது கொள்ளையர்கள் தப்பிப் பிழைத்து ஓடும் காட்சிகள் அக்கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராவில் பதிவாகியுள்ளன.

தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக மிகுந்த துணிச்சலுடன் செயற்பட்டதாக நகைக்கடை உரிமையாளர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.