பிராம்டன் கிழக்கு லிபரல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்

அரசியலிலிருந்து முழுமையாக விடைபெறுவதாக கனேடிய லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜ் கிரெவல் தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட மற்றும் மருத்துவ காரணங்களை மேற்கோள்காட்டி அவர் தனது விலகலை அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினரது ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த அரசியல் விலகல் குறித்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

அதன்படி, பிராம்டன் கிழக்கு தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாகவும், தனது விலகல் குறித்து பிரதம கொரடாவிடம் அறிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.