யாழ்ப்பாணத்தில் கனேடியத் துணை தூதரகத்தை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிப்பு.

யாழ்ப்பாணக் குடாநாட்டில், கனேடியத் துணைத் தூதரகத்தை ஆரம்பிக்குமாறு, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நீண்டகாலமாக விடுத்து வந்த கோரிக்கையை, கனேடிய தூதரகம் நிராகரித்துள்ளது.


வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 3 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள், கனடாவில் வசித்து வருகின்றனர். அவர்களது நன்மை கருதியும் வடக்கு மாகாணத்தில் வாழும் அவர்களது உறவுகளின் நன்மை கருதியும், யாழ்ப்பாணத்தில் கனேடியத் துணை தூதரகத்தை அமைக்க வேண்டுமென, முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நீண்டகாலமாக எழுத்து மூலம் கோரிக்கை விடுத்து வந்தார்.

Kathleen Wynne, Premier of the province of Ontario, Canada hosted Justice C.V. Wigneswaran, Chief Minister of the Northern Province of Sri Lanka at Queen's Park in Toronto.
Kathleen Wynne, Premier of the province of Ontario, Canada hosted Justice C.V. Wigneswaran, Chief Minister of the Northern Province of Sri Lanka at Queen’s Park in Toronto. Jan 2017

இதையடுத்து, கனேடிய தூதரகத்தால் விவரங்கள் சேகரிக்கப்பட்டன. இந்நிலையில், இது தொடர்பில் அறிந்த சிலர், கனேடிய தூதரகத்துக்கு தவறான புள்ளிவிவரத்தை வழங்கியுள்ளதாகவும் அதாவது, வடக்கு மாகாண மக்களில் 1 இலட்சத்து 50 ஆயிரம் பேர் மட்டுமே, கனடாவில் வாழ்வதாக, அவர்கள் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

யாழ்ப்பாணக் குடாநாட்டில், தற்போது இந்தியத் துணை தூதரகம் உள்ளதை போன்று, கனடா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளுக்கான துணை தூதரகங்களும் சுவிட்ஸர்லாந்து நாட்டுக்கான துணைத் தூதரகமும் அமையப்பெற்றால், அந்த நாடுகளில் வாழும் வடக்கு மாகாண மக்களுக்கும் வடக்கில் வாழும் அவர்களது உறவுகளுக்கும், நெருங்கிய உறவைப் பேணமுடியுமென, முன்னாள் முதலமைச்சரால் ​வலியுறுத்தப்பட்டது.

இருப்பினும், கனேடியத் துணை தூதரகத்தை யாழ்ப்பாணத்தில் அமைக்கப்போவது இல்லையென, கனேடிய தூதரகம் அறிவித்துள்ளது.