இலைகோசை உட்கொண்ட 18 பேருக்கு சுகயீனம்! – மக்களுக்கு எச்சரிக்கை

கனடாவின் ஒன்றாரியோ மற்றும் கியூபெக் மாகாண மக்களை இலைகோசை சாப்பட வேண்டாமென கனேடிய பொதுச் சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

குறித்த இரு மாகாணங்களிலும் இலைகோசை உட்கொண்ட 18 பேர் பக்ரீரியா தொற்றுக்கு உள்ளாகியமை நேற்று (செவ்வாய்க்கிழமை) கண்டறியப்பட்டது. கியூபெக் மாகாணத்தில் 15 பேரும் ஒன்றாரியோ மாகாணத்தில் மூன்று பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து இலைகோசை சாப்பிட வேண்டாமென குறித்த மகாண மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பக்ரீறியா தொற்றுக்குள்ளான இலைகோசு சந்தைகளிலும் விற்பனை நிலையங்களிலும் இன்னும் காணப்படலாம் என்ற அடிப்படையில் அவற்றை உண்பதை தவிர்க்குமாறு கோரப்பட்டுள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு கனடா மற்றும் அமெரிக்காவில் இலைகோசை சாப்பிட்டவர்கள் இதேவகையான தொற்றுக்கு உள்ளாகியமை குறிப்பிடத்தக்கது.