ஸ்கார்பாரோவில் வங்கிக்கொள்ளை – இருவர் பொலிஸாரால் மடக்கிப்பிடிப்பு!

ஸ்கார்பாரோவில் உள்ள வங்கி ஒன்றில் கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மார்க்கம் வீதி மற்றும் ஸ்டீல்ஸ் அவென்யூ பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் நேற்று (திங்கட்கிழமை) 12.30 மணியளவில் இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன் பின்னர் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவந்தனர்.

மேலும் இந்த சம்பவம் இடம்பெற்றபோது 3 பேர் காரில் தப்பி சான்றாதாகவும், பின்னர் அதில் இருவர் இந்த சம்பவத்தில் தொடர்பு பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன் பின்னர் அவர்கள் சென்ற வாகனம் சிறிது நேரத்தில் விபத்தில் சிக்கியிருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து அங்கு சென்று அவர்களை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் இருந்த ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டதாகவும் ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்தனர்.

இருப்பினும் குறித்த இருவரின் பெயர்கள் மற்றும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் பொலிஸார் மேலதிக தகவல்களை வெளியிடவில்லை.