பிளாஸ்ரிக் மாசுபாட்டை கையாள்வது குறித்து கனேடிய அதிகாரிகள் விசேட சந்திப்பு

கனடாவில் 90 சதவீத பிளாஸ்ரிக் கழிவுகள் மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படுவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், பிளாஸ்ரிக் மாசுபாட்டை கையாள்வது தொடர்பாக விசேட பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளது.

அதன்படி, சுற்றுச்சூழல் தொடர்பான கனேடிய அமைச்சர்களின் கவுன்சில் அதிகாரிகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஒட்டாவாவில் சந்தித்து பிளாஸ்ரிக் மாசுபாட்டை கையாள்வது தொடர்பாக கலந்துரையாட எதிர்பார்த்துள்ளனர்.

பிளாஸ்ரிக் மாசுபாட்டை எதிர்த்து போராடுவதற்கான தற்போதைய அரசாங்கத்தின் கடப்பாடு குறித்து ஆலோசனையளிக்கும் வகையில் இக்கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்ரிக் பொருட்களின் பயன்பாடு குறித்த எவ்வித விதிகளோ அல்லது மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்ரிக் பொருட்களுக்கு தடையோ இதுவரை விதிக்கப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.