பாலியல் குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்ட 6 மாணவர்களுக்கு பிணை!

ரொறொன்ரோவிலுள்ள பிரபல தனியார் பாடசாலையில் இடம்பெற்ற வன்முறைகள் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 6 மாணவர்கள் நிபந்தனை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பிலான வழக்கு விசாரணை நேற்று (திங்கட்கிழமை) எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

இதன் போது குறித்த மாணவர்கள் 5,000 மற்றும் 7,000 டொலர் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், இவர்களை எதிர்வரும் டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் கைது செய்யப்பட்ட 14 மற்றும் 15 வயதுடைய குறித்த மாணவர்கள்,

  • எதிர்வரும் நாட்களில் ஒருவருக்கொருவர் அல்லது பயிற்சியாளரைத் தொடர்பு கொள்ள கூடாது,
  • பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும்,
  • எந்த ஆயுதங்களையும் வைத்திருக்க அனுமதிக்கப்படமாட்டாது,
  • அவர்களுடைய பெற்றோர்கள் அனைத்து சமூக ஊடக நடவடிக்கைகளையும் மேற்பார்வை செய்ய வேண்டும் என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.