கிங்ஸ்டன் வைத்தியசாலைக்கு உள்ளே கைதி மேற்கொண்ட துப்பாக்கி சூட்டியில் ஒருவர் படுகாயம்!

கிங்ஸ்டன் பொது வைத்தியசாலைக்கு உள்ளே கைதி ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளதாக கிழக்கு ஒன்ராறியோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவமானது நேற்று (திங்கட்கிழமை) மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பொலிஸாரின் துப்பாக்கியை பறித்து கைதி ஒருவர் குறித்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார். இதில் ஒருவர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் படுகாயமடைந்துள்ளார்.

இதன் பின்னர் அவர் அங்கிருந்து தப்பிச் செல்ல முற்பட்ட போது பணியாளர்களும் வைத்தியசாலையின் பாதுகாவலர்களும் இணைந்து கைதிகளை தடுத்து நிறுத்தியதுடன் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்நிலையில் அங்கு வந்த பொலிஸார், கைதியை கிங்ஸ்டன் பொலிஸ் தலைமையகத்திற்கு மாற்றியதாகவும் பொது மக்களுக்கு மேலும் அச்சுறுத்தல் இல்லை என்றும் தெரிவித்தனர்.

இதன் பின்னர் வைத்தியசாலையின் நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.