கனடாவின் வடக்கு போக்குவரத்து திட்டத்தை மேம்படுத்த 400 மில்லியன் நிதி

கனடாவின் வடக்கு பகுதியிலுள்ள வீதிகள், பாலங்கள் மற்றும் விமான நிலையங்கள் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு 400 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியளிக்கவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதன்படி பிராந்தியங்களின் போக்குவரத்து சவால்களை சமாளிப்பதற்கான நிதியுதவிக்கான பரிந்துரைகளை போக்குவரத்து கனடா அமைப்பு எதிர்வரும் திங்கட்கிழமை முதல் கோரவுள்ளது.

அதன்படி, பிராந்திய பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தியை மேம்படுத்தும் நோக்கமாக தெரிவுசெய்யப்பட்ட திட்டங்களுக்கு நிதியளிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

வடக்கு போக்குவரத்து அமைப்பை மேம்படுத்துவதன் மூலம் பொருளாதார வளர்ச்சி, வர்த்தக பல்வகைமை மற்றும் சமூக அபிவிருத்தியை ஏற்படுத்துவதுடன், வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதுடன், வடப் பகுதிகளுக்கான இணைப்பையும் உறுதிபடுத்தும் என போக்குவரத்து அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.